நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் |

பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா, 89 உடல்நலக் குறைவால் நவ., 24ல் காலமானார். அவருக்கு பாலிவுட் திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர். அவர் மறைந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் அவரது மனைவியும், நடிகையுமான ஹேமமாலினி வெளியிட்ட உருக்கமான பதிவு வைரலானது.
ஹேமமாலினி வெளியிட்ட பதிவில், ‛‛தரம்ஜீ(தர்மேந்திரா), அன்பான கணவர், இரு பெண்களின்( இஷா, அஹானா) அப்பா, நண்பர், ஞானி, வழிகாட்டி, கவிஞர் என எனக்கு எல்லாமுமாக நீங்கள் இருந்தீர்கள். தன் எளிமையான, நட்பு ரீதியான பழக்க வழக்கங்களால் என் குடும்பத்தின் அனைவரையும் கவர்ந்தவர். எல்லோரிடமும் பாசமும் ஆர்வமும் காட்டியவர்.
பிரபலமாக இருந்தபோதிலும் மக்கள் மத்தியில் அவரது திறமையும், பணிவு, எல்லோரையும் சென்றடையும் ஈர்ப்பு ஆகியவை அவரை எல்லா நாயகர்களிலும் தனித்து நிற்கும் ஒப்பற்ற சின்னமாக ஆக்கின. திரைத்துறையில் அவரது நிலையான புகழும் சாதனைகளும் என்றென்றும் நீடிக்கும்.
எனது தனிப்பட்ட இழப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வாழ்வில் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடம் என் வாழ்நாள் முழுவதும் நிரப்பப்பட மாட்டாத ஒன்று . பல ஆண்டு இணைந்த வாழ்வுக்குப் பிறகு, எண்ணற்ற நினைவுகள் மட்டுமே மீதமிருக்கின்றன. அந்த அத்தனை சிறப்பான தருணங்களையும் மீண்டும் மீண்டும் வாழ்வதற்காக…'' என உருக்கமாக குறிப்பிட்டு, அவருடன் இருந்த போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார்.