புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம் 'கைதி'. கார்த்தி, நரேன் மற்றும் பலர் நடித்த அப்படம் வித்தியாசமான படமாக அமைந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. தமிழ்த் திரையுலகமே லோகேஷைத் திரும்பிப் பார்த்தது. அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடத்தில் ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்டது.
ஆனால், 'கூலி' படத்தை இயக்கிய பின் லோகேஷ், அவரே கதாநாயகனாக நடிக்கும் ‛டிசி' படத்தில் பிஸியாகிவிட்டார். இதனால், 'கைதி 2' படம் எப்போது ஆரம்பமாகும் என்பது கேள்வியாகவே இன்னும் தொடர்கிறது. இதனிடையே, லோகேஷ் அடுத்ததாக தெலுங்கு நடிகர் நடிக்கும் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளதாம்.
கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அடுத்து அவர் நடித்துள்ள 'சர்தார் 2' வெளியாகும். தற்போது 'மார்ஷல்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த பிறகு 'கைதி 2' ஆரம்பமாகுமா அல்லது அடுத்த வருடத்திற்குத் தள்ளிப் போகுமா என்பது போகப் போகத் தெரியும்.d




