முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் தயாராகும் 'மரகத நாணயம் 2' | 'ஜனநாயகன்' வழக்கு நாளை, ஜனவரி 20ல் மீண்டும் விசாரணை | யஷ், பிரபாஸ் பாணியில் விஜய் சேதுபதி | 2026ம் ஆண்டிலும் தொடரும் வாராவார வெளியீடுகள் | பிளாஷ்பேக் : 'பேசும் படம்' உருவான கதை | பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் மட்டும் வில்லனாக நடித்த எம்.கே. ராதா | பொங்கல் விடுமுறை நிறைவு : புதிய படங்களின் நிலவரம்… | 'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகி 2017ல் வெளிவந்த படம் 'ஸ்பைடர்'. இப்படம் இரண்டு மொழிகளிலுமே படுதோல்வியைத் தழுவியது. இப்படம் மூலம் பிறந்து வளர்ந்த தமிழிகத்தில் தடம் பதிக்கலாம் என நினைத்த மகேஷ்பாபுவுக்கு மிகப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரகுல் ப்ரீத் சிங். அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், 'ஸ்பைடர்' படத்தின் தோல்வி எனது திரையுலகப் பயணத்தைத் தடுத்து நிறுத்தியது. இயக்குனர் முருகதாஸ், மகேஷ்பாபு கூட்டணி மிகப் பெரும் வெற்றியைத் தரும் என எதிர்பார்த்திருந்தேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அப்படத் தோல்விக்குப் பிறகு ரகுலுக்கு தெலுங்கில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் வரவில்லை. கடந்த சில வருடங்களாகவும் அவர் எந்த தெலுங்குப் படத்திலும் நடிக்கவில்லை.
தமிழில், “யுவன், தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், இந்தியன் 2,' ஆகிய படங்களில் நடித்துள்ளார் ரகுல்.




