அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி | டிரெயின் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | கிரிசில்டா குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்: கோர்ட்டில் ரங்கராஜ் மனு | பிளாஷ்பேக்: தோல்வி பயத்தில் டைட்டிலை மாற்றிய டி.ஆர்.மகாலிங்கம் | சிக்கலில் ‛காந்தா' : தடை கோரி வழக்கு | கவுரி கிஷனுக்கு இதுவரை குரல் கொடுக்காத திரிஷா | 25வது நாளை கொண்டாடிய பைசன் |

பாலிவுட்டில் 70, 80களில் முன்னணி நடிகராக கோலோச்சியவர் நடிகர் தர்மேந்திரா. சீனியர் நடிகரான தர்மேந்திரா வரும் டிசம்பரில் 90 வயதை தொட இருக்கிறார். இந்த நிலையில் கடந்த அக்டோபரில் வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்று சோதனைகளை மேற்கொண்டார். அதன் பிறகு சமீபத்தில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான ஹேமமாலினி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி. தற்போது மருத்துவமனையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் தர்மேந்திரா இருக்கிறார். அவர் விரைந்து குணமாக அனைவரும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அதேபோல தர்மேந்திரா தரப்பிலிருந்து அவரது உடல்நிலை குறித்து கூறும்போது, “இந்த சமயத்தில் தர்மேந்திரா மற்றும் அவரது குடும்பத்திற்கான பிரைவசசிக்கு அனைவரும் மதிப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் தர்மேந்திரா உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் அவரது மகள் ஈஷா தியோல் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ''தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. என் தந்தையின் உடல்நிலை சீராகவும், முன்னேற்றமாகவும் உள்ளது. என் தந்தை விரைவில் குணமடைய உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சல்மான்கான் நேரில் மருத்துவமனைக்கு சென்று தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து விசாரித்து விட்டு வந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.