பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பாலிவுட்டின் பிரபல நடிகர் தர்மேந்திரா. 70, 80களில் முன்னணி நடிகராக கோலோச்சியவர். 90 வயது நெருங்கி உள்ள இவர் வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னை காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முதலே இவரது உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் வருகின்றன. ஆனால் குடும்பத்தினர் மறுத்து வந்தனர். இன்று காலை அவர் இறந்ததாக தேசிய அளவில் பெரும்பாலான ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் சற்றுநேரத்திலேயே தர்மேந்திராவின் மகள் இஷா அதை மறுத்தார். அவர் நலமாக இருப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில், தர்மேந்திராவின் மனைவியும், நடிகையுமான ஹேமமாலினி வெளியிட்ட பதிவில், ‛‛சிகிச்சையில் குணமடைந்து வரும் ஒருவரை பற்றி எவ்வாறு தவறான செய்திகளைப் பரப்ப முடியும்? இது அவமரியாதை மற்றும் பொறுப்பற்ற செயல். மன்னிக்க முடியாதது. தயவுசெய்து குடும்பத்திற்கு உரிய மரியாதையையும், அதன் தனிமைக்கான தேவையையும் கொடுங்கள்'' என பதிவிட்டுள்ளார்.