சோஷியல் மீடியாவில் திடீரென வைரலான 'கிரிஜா ஓக் காட்போலி' | ஹீரோனு சொல்லாதீங்க.. கதைநாயகன்னு கூப்பிடுங்க: முனிஸ்காந்த் கெஞ்சல் | திடீரென உயரும் 'தளபதி கச்சேரி' பாடலின் 'வியூஸ்' | ப்ரூஸ் லீ படத்தின் 'இன்ஸ்பிரேஷன்' தான் 'சிவா' | தமிழ் மார்க்கெட்டை குறி வைக்கும் ஸ்ரீலீலா, பாக்யஸ்ரீ | தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு |

கிரிஜா ஓக் காட்போலி, கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாக்கள், கூகுள், சாட் ஜிபிடி என பலரும் தேடிய ஒரு பெயராக இருந்தது. வானின் நீலம் கொண்ட புடவை, வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், கலைத்துவிடப்பட்ட தலைமுடி, ஒரு இயல்பான அழகு என ஒரு வசீகரத்தை ஏற்படுத்தினார்.
அவர் வேறு யாருமல்ல, ஹிந்தி, மராத்தி மொழிகளில் சில டிவி தொடர்களிலும், 'தாரே ஜமீன் பர்', உள்ளிட்ட சில ஹிந்திப் படங்கள், மராத்தி படங்களில் நடித்த நடிகை கிரிஜா ஓக் காட்போலி.
சோஷியல் மீடியாவைப் பொறுத்தவரையில் யார் எப்போது பிரபலமாவார்கள் என்பதைச் சொல்லவே முடியாது. 37 வயதான கிரிஜா ஓக், 2004ம் ஆண்டிலிருந்து நடித்து வந்தாலும் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு தென்னிந்தியா வரையிலும் பிரபலமாகி உள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்பு யு டியூப் சேனல் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டிதான் இத்தனை பிரபலத்திற்குக் காரணம். முதல் பாராவில் குறிப்பிட்ட அந்தத் தோற்றத்தில் அவர் பேசிய விதம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.