2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பிரபல பாலிவுட் மூத்த நடிகரான தர்மேந்திரா கடந்த சில நாட்களுக்கு முன்பு வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். எண்பது தொண்ணூறுகளில் ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வந்த இவருக்கு மொழி தாண்டியும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த நிலையில் வரும் டிசம்பர் 8ஆம் தேதி தர்மேந்திராவில் பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் மும்பை லோனாவாலாவுக்கு அருகில் உள்ள கந்தலா என்கிற இடத்தில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவை கொண்ட தர்மேந்திராவின் பண்ணை வீடு ரசிகர்களின் பார்வைக்காக திறந்து விடப்பட இருக்கிறது.
இந்த தகவலை அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். டிசம்பர் 8ம் தேதி மதியம் ஒரு மணி முதல் இந்த பண்ணை வீடு ரசிகர்களுக்காக திறந்து விடப்படும். இதற்கு அனுமதி கட்டணம், முன்பதிவு என எதுவும் இல்லை. அது மட்டுமல்ல. பண்ணை வீட்டிற்கு வரும் ரசிகர்களை அழைத்து செல்வதற்காக லோனாவானாவில் இருந்து இலவச வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.