2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

உலக அளவில் தேடுதல் இணையதளங்களில் முதலிடத்தில் இருப்பது கூகுள் இணையதளம். எது வேண்டுமானாலும் அந்த இணையதளத்தில் தேடிப் பார்க்கலாம். இந்த 2025ம் ஆண்டில் அதிகத் தேடல்களில் என்னென்ன அதிகம் தேடப்பட்டது என்ற பட்டியலை கூகுள் இணையதளம் வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் அதிகமாகத் தேடப்பட்ட 10 படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் தமிழ்ப் படமான 'கூலி' படம் மட்டும் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் ஹிந்திப் படமான 'சாயாரா', 2ம் இடத்தில் கன்னடப் படமான 'காந்தாரா சாப்டர் 1', 4ம் இடத்தில் ஹிந்திப் படமான 'வார் 2' 5ம் இடத்தில் ஹிந்திப் படமான 'சனம் தேரி கசம்', 6ம் இடத்தில் மலையாளப் படமான 'மார்கோ', 7ம் இடத்தில் ஹிந்திப் படமான 'ஹவுஸ்புல் 5', 8ம் இடத்தில் தமிழ் இயக்குனர் ஷங்கர் இயக்கிய தெலுங்குப் படமான 'கேம் சேஞ்ஜர்', 9ம் இடத்தில் ஹிந்திப் படமான 'மிஸஸ்', 10ம் இடத்தில் அனிமேஷன் படமான 'மகாவதார் நரசிம்மா' ஆகியவை உள்ளன.
ஒரே ஒரு தமிழ்ப் படமே இடம் பெற்றிருந்தாலும் அது 3ம் இடத்தில் இருப்பது கொஞ்சம் ஆறுதல் தான். அறிமுக நடிகர், நடிகை நடித்த 'சாயாரா' படம் முதலிடத்தில் இருப்பது ஆச்சரியம்தான். ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்ட டாப் 10 தேடல் நட்சத்திரங்கள் பட்டியலில் கூட அப்படத்தின் நாயகன் அஹான் பாண்டே, நாயகி அனித் பாண்டா முதலிரண்டு இடங்களைப் பிடித்திருந்தார்கள்.