ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

இயக்குனர் மற்றும் நடிகராக இருந்த விசு, அதற்கு முன்பு நாடகங்கள் நடத்தி வந்தார். அவர் நடத்திய நாடகங்களையே பின்னாளில் திரைப்படமாகவும் இயக்கினார். அவர் நடத்தி வந்த முக்கியமான நாடகம் 'பாரத மாதருக்கு ஜே'.
இந்த நாடகம்தான் முதலில் 'சதுரங்கம்' என்ற பெயரில் திரைப்படமானது. ஆனால் விசு இயக்கவில்லை, துரை இயக்கினார். சித்ரா ஆர்ட்ஸ் சார்பில் என்.சந்திரா தயரித்தார். ரஜினி, ஸ்ரீகாந்த், ஜெயசித்ரா, பிரமிளா நடித்தனர். வி.குமார் இசை அமைத்தார். படத்திற்கு திரைக்கதை வசனத்தை விசு எழுதினார்.
இதே படத்தைத்தான், கதையில் சில மாற்றங்களை செய்து விசு மீண்டும் இயக்கினார். அந்தப் படம் 'திருமதி ஒரு வெகுமதி'. இதில் பாண்டியன், எஸ்.வி.சேகர், நிழல்கள் ரவி, கல்பனா நடித்தார்கள். சங்கர்-கணேஷ் இசை அமைத்தனர். கே.பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்ஷன் தயாரித்தது. இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது.




