காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

'மிடில் கிளாஸ் பேமிலியை' மையமாக கொண்ட படங்களில் இரண்டு முக்கியமான அம்சங்கள் உண்டு. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கலாம், மினிமம் கியாரண்டி இருக்கும். அப்படித்தான் சமீபத்தில் வெளிவந்த 'மிடில் கிளாஸ், குடும்பஸ்தன், பார்க்கிங்' போன்ற படங்கள் அமைந்தன.
அந்தக் காலத்திலும் மிடில் கிளாஸ் பேமிலி படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. அதில் முக்கியமானது 'முதல் தேதி' என்கிற படம். இந்த படம் 'பஹலி தாரிக்' என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக். இதனை தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ப.நீலகண்டன் இயக்கினார்.
தமிழ் பதிப்பில் சிவாஜி கணேசன், அஞ்சலிதேவி, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், 'குலதெய்வம்' ராஜகோபால், 'ஜெயக்கொடி' கே.நடராஜன், கே.டி. சந்தானம், ஆர்.பாலசுப்ரமணியம், முஸ்தபா, சி.வி.வி. பந்துலு, 'யதார்த்தம்' பொன்னுசாமி பிள்ளை, தசரதன், டி.ஆர். நடராஜன், வி.கே. ஆச்சாரி குண்டுமணி, குமாரி சுசீலா, பேபி உமா, சாரதாம்பாள் கிருஷ்ணவேணி ஆகியோர் நடித்தனர்.
சிவாஜி நடுத்தர வர்க்க குடும்பஸ்தன். குறைந்த சம்பளத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றி வருவார். அவரது மனைவி அஞ்சலி தேவி, நண்பன் என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.
ஒரு நாள் சிவாஜி பணியாற்றிய வங்கி, திவாலாகி விடும். இதனால் வேலை இழக்கும் சிவாஜி குடும்பத்தை நடத்த கஷ்டப்படுவார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்வார். அவரது ஆவி எமதர்மராஜன் முன் நிற்கும். இன்னும் ஆயுள் இருக்கும்போது தற்கொலை செய்து கொண்டுள்ள சிவாஜியை பார்த்து சினம் கொள்ளும் எமன் "மீண்டும் பூமிக்கு சென்று நீ தற்கொலை செய்து கொண்டதால் என்னவெல்லாம் நடக்கிறது என்று பார்த்து வா" என்று அனுப்பி வைப்பார்.
சிவாஜி பூமிக்கு வருவார், குடும்பம் வறுமையில் தவிக்கும், மகள் சிலரால் பலாத்காரம் செய்யப்படுவாள், மகன் திருடனாக மாறுவான், இப்படி பல விஷயங்கள் நடக்கும், சிவாஜி ஆவி என்பதால் அதை பார்க்கத்தான் முடியுமே தவிர அவரால் எதுவும் செய்ய முடியாது. தான் தற்கொலை செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அவர் உணரும்போது சிவாஜி விழித்துக் கொள்வார். ஆம்... தற்கொலை எண்ணத்துடன் தூங்கச் சென்ற சிவாஜி கண்ட கனவுதான் படத்தின் திரைக்கதை.