ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

மலையாளத்தில் 'பூதக்காலம்' என்கிற ஹாரர் படத்தின் இயக்குனராக அறிமுகமானவர் ராகுல் சதாசிவன். அந்த படத்தை தொடர்ந்து மம்முட்டியை வைத்து அவர் இயக்கிய 'பிரம்மயுகம்' திரைப்படம் அவருக்கு தென்னிந்திய அளவில் மட்டுமல்லாமல் அவர் கதை சொன்ன விதத்திற்காக பாலிவுட்டிலும் கூட வரவேற்பை பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து மோகன்லால் மகன் பிரணவ் நடித்த டயஸ் இரே என்கிற ஹாரர் படத்தை எடுத்தார்.
இந்த படமும் 100 கோடி வசூலித்தது. இந்த நிலையில் தற்போது புதிதாக தனது பாணியிலேயே மீண்டும் ஹாரர் படம் ஒன்றை இயக்கத் தயாராகி வருகிறார் ராகுல் சதாசிவன். இந்த படத்தில் பிரித்விராஜ் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் நடிக்க இருக்கிறார்கள் என்று ஒரு தகவல் தற்போது மலையாள திரையுலக வட்டாரத்தில் வெளியாகியுள்ளது.




