20 அடி ஆழத்தில் ஆடையின்றி நடித்த ஆர்யா | பிளாஷ்பேக்: மாற்றங்கள் பல கடந்து, மகத்தான வெற்றியைப் பதிவு செய்த எம் ஜி ஆரின் “ரிக்ஷாக்காரன்” | போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி உருவாகியுள்ள 'முதற்கனல்' | சமந்தா படத்தின் முதல் சிங்கிள் ஏப்., 19ல் வெளியீடு | ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புராண படம் | 'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? அந்த 3 இயக்குனர்களும் பிஸியாமே? | ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் |

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா இணைந்து 'எம்போஹெர்' விருதுகள் வழங்கியது. இந்தியாவின் சமூக, பொருளாதார, கலாசார, அறிவியல் அல்லது பொது வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த பெண்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை, பூந்தமல்லியில் உள்ள சவீதா பல் மருத்துவ வளாகத்தில் உள்ள எம்எம் கன்வென்ஷன் சென்டரில் நடந்த இந்த விழாவில் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் கர்நாடக பாடகி எஸ்.ஜே. ஜனனிக்கு, திரைப்படம் மற்றும் கர்நாடக இசைப் பிரிவில் சிறந்து விளங்குவதற்கான 'எம்போஹெர்' விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விருதினை பத்ம பூஷண் விருது பெற்ற பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் சவீதா குழும நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் என். எம். வீரையன் மாரப்பன் வழங்கினார்.




