ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் |

திரையுலகை சேர்ந்தவர்கள் அவ்வப்போது பல்வேறு விமான பயணங்களை மேற்கொண்டு வந்தாலும் அடிக்கடி இதுபோன்ற பிரபலங்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாவது என்னவோ ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவை தான். அந்த வகையில் லேட்டஸ்டாக பிரபல சிதார் இசை கலைஞர் ரவிசங்கரின் மகளான அனோஷ்கா சங்கர் தன்னுடைய சிதார் இசைக்கருவியை ஏர் இந்தியா விமான சேவை சேதப்படுத்தி விட்டது என்று சோசியல் மீடியாவில் ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கிட்டத்தட்ட 1000 விமான பயணங்களில் என்னுடைய உற்ற நண்பனாக பயணித்த இந்த சிதார் கருவியை ஏர் இந்தியா விமான நிறுவனத்தினர் கவனமின்மையுடன் கையாண்டதால் இது உடைந்து சேதம் அடைந்துள்ளது. இத்தனைக்கும் இதன் பாதுகாப்புக்காக சிறப்பு கட்டணம் வேறு செலுத்தி இருந்தேன். இத்தனை வருடங்களில் ஏர் இந்தியாவில் நான் பயணிப்பது இதுதான் முதல் முறை. இந்த முதல் முறையிலேயே இப்படி ஒரு மோசமான அனுபவத்தை எனக்கு ஏர் இந்தியா கொடுத்து விட்டது” இன்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் அனோஷ்கா சங்கருக்கு ஆதரவாக ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவைக்கு எதிராக தங்களது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.