75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? |

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ஏஆர் ரஹ்0மான் இசையமைப்பில், தனுஷ், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்திப் படம் 'தேரே இஷ்க் மெய்ன்'. இப்படம் மொத்த வசூலாக 75 கோடியைப் பெற்றுதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிகர வசூல் 60 கோடியைக் கடந்துள்ளது. இந்த வாரத்திற்குள்ளாக 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் நடித்து கடைசியாக வெளிவந்த 'குபேரா, இட்லி கடை' ஆகிய தமிழ்ப் படங்கள் தமிழில் சரியாகப் போகவில்லை. தனுஷ் நடித்த ஹிந்திப் படங்களில் அவரது முதல் ஹிந்திப் படமான 'ராஞ்சனா' மட்டுமே 100 கோடி வசூலைக் கடந்தது. அடுத்து வந்த 'ஷமிதாப்' தோல்வியைத் தழுவியது. 'அத்ராங்கி ரே' ஓடிடியில் நேரடியாக வெளியானது.
10 வருட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்களில் வெளியான ஹிந்திப் படமாக 'தேரே இஷ்க் மெய்ன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்று அவரது ஹிந்திப் பிரபலத்தை தக்க வைத்துள்ளது. தனுஷின் அடுத்த தமிழ்ப் படமாக எது ஆரம்பமாகும் என்பதில் ஒரு குழப்பம் நீடித்து வருகிறது.