சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? | வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிரபலமான நடிகையான சென்னையைச் சேர்ந்த சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமொருவை சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தனித்தனியே அவர்களது முதல் திருமண உறவை விட்டுப் பிரிந்தவர்கள். 'பேமிலி மேன்' வெப்சீரிஸில் ஒன்றாகப் பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பின் இருவரும் ஒன்றாக இருந்த சில புகைப்படங்கள் வெளியானாலும், தங்களது காதலைப் பற்றி வெளிப்படையாக சொல்லாமல் இருந்தார்கள்.
இவர்களது திருமணம் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சைகளும் கமெண்ட்டுகளும் வந்தன. சமந்தாவின் முதல் கணவரான நடிகர் நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' பட நடிகை சோபிதா துலிபலாவை கடந்த ஆண்டு திருமணம் செய்த போது இப்படியான ஒரு சர்ச்சையும், கமெண்ட்டுகளும் எழவில்லை. ஆனால், சமந்தாவின் மறுமணம் நடந்த உடனேயே இப்படியான சர்ச்சை எழுவது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இதனிடையே, சமந்தாவின் கணவர் ராஜ் நிடிமொருவின் சகோதரி ஷீதல் நிடிமொரு, சமந்தாவை தங்கள் குடும்பத்தினருடன் வரவேற்றது குறித்து பதிவிட்டுள்ளார்.
“சிவனை சந்திரகுண்டத்தில் இன்று வழிபடும்போது…ஈரமாக, நடுங்கியபடி, பிரதோஷ காலத்தில், நான் சிவலிங்கத்தை கண்ணீருடன் நிறைந்த இதயத்துடன் அணைத்துக்கொண்டேன். வலியின் கண்ணீர்கள் அல்ல… ஆனால் நன்றியின் கண்ணீர்கள்.
இந்த தருணத்தில் நான் உணரும் அமைதிக்கான நன்றி, எங்கள் குடும்பத்தைச் சூழ்ந்திருக்கும் தெளிவுக்கான நன்றி, மற்றும் ராஜ் மற்றும் சமந்தாவின் பயணத்தில் உள்ள 'மென்மையான சீரமைப்பு' உணர்வுக்கான நன்றி.
ஒரு குடும்பமாக நாங்கள் அவர்கள் எப்படி முன்னேறி செல்கிறார்கள் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறோம்…அமைதியான கண்ணியம், நேர்மை, மற்றும் இரு இதயங்கள் திட்டமிட்டு ஒரே பாதையை தேர்ந்தெடுக்கும்போது வரும் உறுதியுடன்.
மேலும் ஒரு குடும்பமாக, நாங்கள் அவர்களுடன் முழுமையாக, மகிழ்ச்சியுடன், தயக்கமின்றி நிற்கிறோம், அவர்களை ஆசீர்வதித்து, எல்லா வழிகளிலும் ஆதரித்து.
இத்தகைய புனிதமான நாளில் இஷா சடங்குகளை குடும்பமாகச் சேர்ந்து செய்வது வாழ்க்கை தன்னை மிக அழகான வழியில் சீரமைத்துக்கொள்வது போல் உணர்ந்தது. சில உறவுகள் வெறுமனே நிகழ்வதில்லை என்பதை அது நினைவூட்டியது…
அவை அமைதியுடன் வருகின்றன.
நான் எள் எண்ணெய் விளக்குகளை ஏற்றும்போது என் இதயம் ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டும் பிரார்த்தித்தது: ஒவ்வொருவரும் இத்தகைய அமைதியான, உறுதியான, மற்றும் சரியான அன்பை கண்டுபிடிக்கட்டும்,” எனப் பதிவிட்டுள்ளார்.