ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? | வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ | பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன் | மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. சில தினங்களுக்குமுன்பு கூட ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி ஜெயிலர் 2 ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படத்தில் இணைபவர்கள் பட்டியல் கூடிக் கொண்டே போகிறது. ஏற்கனவே, ரஜினியுடன் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும், மோகன்லாலும் இருக்கிறார்கள்.
ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தியும் நடிக்கிறார் என கூறப்படும் நிலையில், லேட்டஸ்ட்டாக, ஷாருக்கானும் அந்த படத்தில் இணையப்போகிறார். கவுரவ வேடத்தில் அவர் நடிக்கும் காட்சிகள் அடுத்த ஆண்டு படமாக்கப்பட உள்ளன என தகவல். கூலி படத்தின் வசூல் ஆயிரம் கோடியை ஈட்டவில்லை. இதுவரை தமிழில் எந்த படமும் ஆயிரம் கோடி வசூலை அள்ளவில்லை. அந்த சாதனையை ஜெயிலர் 2 படம் நிகழ்த்த வேண்டும். அதனால்தான், மற்ற மொழிகளை சேர்ந்த ஹீரோக்களை படத்த்தில் சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று த கவல் வருகிறது.
கமலுடன் ஹேராம் படத்தில் நடித்த, தனது சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் ஆடி ரஜினியை புகழ்ந்த ஷாருக்கான், ரஜினிகாந்த்தின் 50வது ஆண்டு பயணத்தில் வரும் ஜெயிலர் 2வில் நடிப்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.