பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

2025ம் ஆண்டின் கடைசி மாதத்தில் நுழைந்துவிட்டோம். கடந்த வாரத்துடன் முடிவடைந்த நவம்பர் மாதத்தில் வெளியான தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 250ஐக் கடந்தது. எந்த ஒரு வருடத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு வருடத்தின் 11 மாதங்களில் இவ்வளவு படங்கள் வெளியானது இதுவே முதல் முறை.
இந்த வருடம் முடிய இன்னும் நான்கு வாரங்கள் உள்ளன. அந்த நான்கு வார வெளியீட்டு நாட்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்து, இந்த வருட மொத்த வெளியீட்டில் 300ஐக் கடந்து மீண்டும் ஒரு சாதனையைப் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அது நடக்கும் என்ற விதத்தில் இந்த வாரத்திலும் வழக்கம் போல ஐந்தாறு படங்கள் வெளியாக உள்ளன. “அங்கம்மாள், கேம் ஆப் லோன்ஸ், லாக் டவுன், சாரா, (சாவீ)சாவு வீடு, நிர்வாகம் பொறுப்பல்ல,” உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் டிசம்பர் 5ல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எப்போதுமே வருடத்தின் கடைசி மாதங்களில் அதிகமான படங்கள் வெளியாவது வழக்கம். அதனால், அடுத்த மூன்று வாரங்களில் வெளியாக உள்ள படங்களின் அறிவிப்புகள் இன்னும் சில வாட்களில் வர வாய்ப்புள்ளது. அதன் பிறகே 300ஐ நெருங்குமா, 300ஐக் கடக்குமா என்பது தெரிய வரும்.