'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் சினிமாவில் விஜய் நடித்த 'கத்தி' படத்தின் மூலம் பிரம்மாண்டமாக அடியெடுத்து வைத்தது லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம். இலங்கைத் தமிழரான சுபாஷ்கரன், இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று அங்கு தனது முயற்சியால் பெரும் தொழிலதிபராக வளர்ந்தார். தமிழ் சினிமா மீதுள்ள ஆர்வத்தில் இங்கு வந்து தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த பல பிரம்மாண்டப் படங்களைத் தயாரித்தார்.
ஆனால், கடந்த சில படங்களாக அவர்களது தயாரிப்பு நிறுவனத்தில் வெளிவந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மலையாளத்தில் மோகன்லால் நடிக்க பிருத்விராஜ் இயக்கிய 'எல் 2 எம்புரான்' படத்தைத் தயாரிக்க ஆரம்பித்து கடைசி நேரத்தில் அப்படத்திலிருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெளியாகும் அப்படத்தின் புரமோஷன்களில் படக்குழுவினர் லைக்கா பெயரைத் தவிர்த்து வருகின்றனர்.
ஆனால், இது குறித்து லைக்கா தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
லைக்கா நிறுவனம் தற்போது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை மட்டுமே தயாரித்து வருகிறது. வேறு எந்தப் படத் தயாரிப்பிலும் ஈடுபடவில்லை.
லைக்கா நிறுவனம் தயாரித்து முடித்து வெளியீட்டையும் அறிவித்த படமான 'லாக்டவுன்' படத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை. அறிமுக இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதையின் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை கடந்த வருடம் ஜுன் மாதம் வெளியிடுவதாக டீசர் மூலம் அறிவித்தனர். ஆனால், அதன்பின் படம் பற்றிய அப்டேட் எதுவுமே வெளியாகவில்லை.
வெளியீட்டிற்குத் தயாராக உள்ள இந்தப் படம் வெளியாகுமா அல்லது அப்படியே முடங்கிப் போகுமா என கோலிவுட் வட்டாரத்தில் சந்தேகத்தை எழுப்புகின்றனர். ஒரு அறிமுக இயக்குனரின் படத்திற்கு இப்படி ஒரு நிலை வந்திருக்க வேண்டாம் என்று வருத்தப்படுகின்றனர்.