விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இயக்குனர்களில் டாப் 5 இடத்தில் கண்டிப்பாக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். அவருடைய சீனியர் இயக்குனர்கள் சிலரை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவர் மேலே முன்னேறிவிட்டார் என்று கூட தாராளமாக சொல்லலாம்.
ரஜினிகாந்த் நடிக்கும் படமொன்றை முதல் முறையாக இயக்கியுள்ள லோகேஷ், அதில் மல்டி ஸ்டார்கள் இருந்தாலும் படத்தைத் திட்டமிட்டபடி முடித்துள்ளார். அவர்கள் இணைந்த 'கூலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர்கள் எனப் பெயரெடுத்த சிலர் இங்கு இரண்டு, மூன்று வருடங்கள் ஒரு படத்தை முடிக்க நேரம் எடுத்துக் கொள்ளும்போது ஒரு வருடத்திற்குள்ளாகவே தனது படங்களை முடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் லோகேஷ்.
அவர் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமான 'மாநகரம்' படத்தை 45 நாட்களிலும், 'கத்தி' படத்தை 62 நாட்களிலும், 'மாஸ்டர்' படத்தை 129 நாட்களிலும், 'விக்ரம்' படத்தை 110 நாட்களிலும், 'லியோ' படத்தை 125 நாட்களிலும் முடித்துள்ளார். தற்போது 'கூலி' படத்தை 150 நாட்களில் முடித்துள்ளார் என்று தகவல்.
முழுமையான ஸ்கிரிப்ட், சரியான திட்டமிடல் ஆகியவற்றுடன் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்ற பெயரையும் பெற்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். அடுத்து கார்த்தி நடிக்க உள்ள 'கைதி 2' படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.