மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
அஜித் நடிப்பில் வெளிவந்த 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு அவர் புதிய படங்கள் எதிலும் ஒப்புக் கொள்ளவில்லை. அவரது அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க இருக்கிறார் என்றாலும் அது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் அஜித்தின் கார் ரேஸ் அணி தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவதால் இன்னும் சில காலம் கார் ரேஸில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2025ம் ஆண்டின் ரேசிங் பயணம் ஆர்வம், பொறுமை, முன்னேற்றம் ஆகியவற்றின் பயணமாக அமைந்தது. இது வெறும் போட்டியல்ல கற்பதற்கான பயணம். வெற்றிகள், தோல்விகள் சாவல்கள் இவற்றால் இந்த பயணம் நிறைந்திருந்தது. அதுவே எங்களை உலக மேடைகளில் வெளிப்படுத்தி உள்ளது.
துபாயின் வெப்பம் முதல் ஐரோப்பாவின் பனி வரை ஒவ்வொரு போட்டியும் எங்கள் அணியை வலுப்படுத்தியது. ஆர்வமும், அடக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை இந்த பயணம் நிரூபித்தது. ஆசியா, ஐரோப்பா என இரண்டு கண்டங்களில் 26 போட்டிகளில் பங்கேற்றோம். ஒரு இந்திய அணி இத்தனை போட்டிகளில் போட்டியிட்டது புதிய சாதனை.
இந்த பயணத்தில் தோல்விகள், தொழில்நுட்ப கோளாறுகள், பருவ நிலை மாற்றங்கள் என பல சவால்கள் இருந்தன. வீரர்கள், மெக்கானிக்குகள், பொறியாளர்கள் இணைந்து இதனை வென்றனர்.
இந்த ஆண்டின் அனுபவத்தை சொல்ல ஒரு புத்தகமே எழுத வேண்டும். இந்த அனுபவம் ஒரு தொடக்கமே. இப்போது தொடர்ந்து சோதனைகள், திட்டமிடல்கள், தொடர்ந்து சர்வதேச துறையில் இன்னும் விரிவாக பயணிக்க கவனம் செலுத்த இருக்கிறோம். இந்த பயணத்தில் கற்றுக் கொண்டதை வருகிற பயணத்தில் சிறப்பாக பயன்படுத்துவோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நீண்ட அறிக்கையில் ஒரு வார்த்தை கூட சினிமா குறித்து இடம் பெறவில்லை. இதனால் அடுத்த ஒரு ஆண்டுக்கு அஜித் சினிமாவில் கவனம் செலுத்தப்போவதில்லை என்று தெரிகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.