ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

தமிழில் கவுரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். இவரது கணவர்தான் ஹிந்தியில் வெளியான துரந்தர் படத்தை இயக்கிய ஆதித்ய தர். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். இந்த படம் வருகிற மார்ச் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்த ஒரு தகவலை தற்போது யாமி வெளியிட்டுள்ளார்.
அதில், துரந்தர் 2 படத்தில் பல சிறப்பு வேடங்கள் இடம் பெற்றிருக்கிறது. குறிப்பாக விக்கி கவுசல் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதோடு நானும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன். இந்த துரந்தர்-2 படத்தில் சின்ன சின்ன வேடங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார் .
கடந்த 2021ம் ஆண்டு இயக்குனர் ஆதித்ய தரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு அம்மாவான யாமி, தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.