ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு அஜித், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் அஜித் 64 படத்தில் இணைகிறது. இந்தப் படம் பற்றி அவ்வப்போது ஒரு சில அப்டேட்களை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்து வந்தார். அதே சமயம் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
கடந்த சில மாதங்களாக அஜித் கார் ரேஸ்களில் மிகவும் பிஸியாக இருக்கிறார். துபாயில் நடந்த கார் ரேஸ்களில் அவர் கலந்து கொண்ட போது பல சினிமா பிரபலங்கள் அவரைச் சென்று பார்த்து வந்தனர். அடுத்த ஓரிரு வாரங்களில் அஜித் கலந்து கொள்ளும் கார் ரேஸ்கள் முடிவுக்கு வருகிறதாம். பின்னர் சிறு ஓய்வெடுத்துவிட்டு அஜித் 64 படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம். அநேகமாக இந்த மாதக் கடைசி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள்.
படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர்கள் நடிகைகள், இசையமைப்பாளர், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு சில நாட்கள் முன்னதாக வெளியாகும் எனத் தெரிகிறது.
வெளிவர உள்ள 'ஜனநாயகன்' படத்துடன் விஜய் சினிமாவை விட்டு விலக உள்ள நிலையில் எந்தப் போட்டியும் இல்லாத சினிமா பயணம் அஜித்திற்கு ஆரம்பமாக உள்ளது.