மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‛குட் பேட் அக்லி' படத்தில் நடித்த அஜித் குமார், மீண்டும் அவர் இயக்கும் தனது 64வது படத்திலும் நடிக்கப் போகிறார். இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பை இம்மாதம் வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டு இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். ஆனால் அஜித் மேலும் இரண்டு மாதம் டைம் கேட்டதால் தற்போது படப்பிடிப்பை ஜனவரி மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில் அஜித் குமாரும் உறுதிப்படுத்தி இருந்தார்.
இதனால் அஜித் 64வது படத்தின் அறிவிப்பு தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி இம்மாதமே அப்படத்தின் அறிவிப்பை வெளியிட ஆதிக் ரவிச்சந்திரன் தயாராகி வருகிறார். அதோடு நவம்பரில் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்த அவர், தற்போது படப்பிடிப்பு ஜனவரிக்கு மாறி விட்டதால் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு அஜித் 64வது படத்தை வெளியிடுவதற்கும் திட்டமிட்டுள்ளார்.