பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தெலுங்கில் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படம் 'பெத்தி'. நாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, முக்கிய வேடங்களில் சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, ஷோபனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படம் வரும் மார்ச் 27ல் ரிலீஸ் என ஏற்கனவே அறிவித்தனர். ஆனால் பட பணிகள் இன்னும் முடியாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என செய்தி வெளியானது.
இந்நிலையில் படத்தை ஒரு மாதம் தள்ளி வைத்துள்ளனர். அதாவது ஏப்., 30ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். தெலுங்கில் உருவானாலும் இப்படம் தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் மிருணாள் தாக்கூர் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இதற்காக அவருக்கு கணிசமான தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது.