இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

மதன் இயக்கத்தல் 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிக்கும் 'வித் லவ்' படம், நாளை மறுநாள்தான் ரீலீஸ் ஆகிறது. ஆனாலும் இப்பவே 'வித் லவ் வெரி நைஸ், சூப்பர்ப் ரொம்ப நல்லா இருக்கு' என பாராட்டி இருக்கிறார் ரஜினிகாந்த்.
மேலும், படத்தை நேற்றே பார்த்து இருக்கிறார். இப்படி படத்தின் மீது அவர் ஆர்வம் காண்பிக்க முக்கியமான காரணம் சவுந்தர்யா. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர். அதனால், மகள் படம் வெற்றி அடைய வேண்டும். மகளுக்கு தன்னால் ஆன உதவி செய்ய வேண்டும் என்பதற்காக, படம் பார்த்துவிட்டு இப்படி பாராட்டி இருக்கிறார்.
பொதுவாக, சமீபகாலமாக தியேட்டருக்கு சென்று ரஜினி படம் பார்ப்பது இல்லை. தனது வீட்டில் அல்லது பிரிவியூ தியேட்டரில் அல்லது ஒரு பிரபல டிவி நிறுவனத்துக்கு சொந்தமான பிரிவியூ தியேட்டரில்தான் பார்க்கிறார். ஆனால், வித்லவ் படத்தை படத்தை பல ஆண்டுகளுக்குபின் தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்து இருக்கிறார். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டோம். இளைய மகளுக்கு அது கொடுத்தும் சரியாக செட்டாகவில்லை. அவர் தயாரிக்கும் இந்த படம் வெற்றி பெற வேண்டும். மகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக, தனது கட்டுப்பாடுகளை அவர் உடைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.




