Advertisement

சிறப்புச்செய்திகள்

இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிப்ரவரி தொடங்கிவிட்டது: அஜித் பட அறிவிப்பு எப்போது?

04 பிப், 2026 - 05:39 IST
எழுத்தின் அளவு:
February-has-begun-When-will-Ajiths-film-be-announced
Advertisement


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கப்போகிறார் என்று கடந்த ஆண்டே பேச்சு வந்தது. பல பேட்டிகளில் ஆதிக் ரவிச்சந்திரனும் அதை உறுதிப்படுத்திவிட்டு, பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றார். இப்போது பிப்ரவரியும் வந்துவிட்டது. எப்போது அறிவிப்பு வரும் என அஜித் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அஜித்தின் சம்பள பிரச்னை காரணமாகவே அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. தவிர, கார் ரேசிலும் அஜித் தீவிரமாக இருக்கிறார். அஜித் கேட்கும் அந்த சம்பளத்தை கொடுத்தால், படத்தின் பிஸினசில் பாதிப்பு ஏற்படும். படத்தை தயாரிக்கும் நிறுவனத்துக்கு பெரிய ரிஸ்க் என்பதால், பல நிறுவனங்கள் தயங்குகின்றன.

ரோமியோ பிக்சர் ராகுல், வைஜெந்தி பிலிம்ஸ் உட்பட பலர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இன்னும் சிலரும் அஜித் படத்தை தயாரிக்க ரெடி. ஆனால், அஜித் சம்பளத்தை குறைத்தால் மட்டுமே தயாரிப்போம் என்கிறார்களாம். ஆனால், அஜித்தோ 180 கோடி வரை சம்பளம் கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.

பிப்ரவரி தொடங்கிவிட்டதால் விரைவில் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டப்பட்டு, படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார் ரேஸ் நடக்கும்போது இசையமைப்பாளர்கள் அனிருத், ஜி.வி.பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா என 3 பேரும் அஜித்தை சந்தித்து பேசினார்கள். இவர்களில் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார் என்று கூறப்பட்டாலும், இசையமைப்பாளர் விஷயத்திலும் சிக்கல் நீடிக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'அரசன்' படத்தில் இருந்து விலகினாரா விஜய்சேதுபதி?'அரசன்' படத்தில் இருந்து ... படம் வெளியாகும் முன்பே பாராட்டிய ரஜினிகாந்த்: ஏன் தெரியுமா? படம் வெளியாகும் முன்பே பாராட்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap