நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, அஞ்சலி மற்றும் வெங்கட்பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் குழு நடித்து 2011ல் வெளியான படம் ‛மங்காத்தா'. அஜித்தின் 50வது படமாக வெளியாகி சூப்பர் ஹிட்டானது. யுவன் இசையமைத்த பாடல்கள், தீம் மியூசிக் கொண்டாடப்பட்டது. இந்த படத்தை இன்று(ஜன., 23) மீண்டும் ரீ ரிலீஸ் செய்துள்ளனர். தமிழகம் முழுக்க பல்வேறு ஊர்களில் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரவேற்றுள்ளனர். சென்னையில் இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்களுடன் பார்த்தார்.
‛குட் பேட் அக்லி' படத்திற்கு பின் அஜித்தின் 64வது படத்தை மீண்டும் இவர் தான் இயக்குகிறார். இதுபற்றி படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஆதிக், ‛‛பிப்ரவரி முதல் அஜித் 64 படப்பிடிப்பை துவங்க உள்ளோம். படம் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகும். குட் பேட் அக்லி முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது. இந்தப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பார்க்கும் விதமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் புதிதாக நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது'' என்றார்.