மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வரும் நடிகை தமன்னா, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் நடிகர்கள் அஜித்குமார், விஜய் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது தமன்னா பேசியதாவது: இளம் வயதிலேயே சினிமாவிற்கு வந்துவிட்டதால் எனக்கு கல்லூரி அனுபவமே கிடைக்கவில்லை. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'புருஷன்' படத்தில் நடித்து வருகிறேன். படப்பிடிப்புக்கு இடையில் தான் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன்.
நடிகர் விஜய் மிகவும் மென்மையான, எளிமையான மனிதர். நடனம் ஆடுவதில் அவருக்கும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்.,க்கும் தனி திறமை இருக்கிறது. நடனத்தில் அவர்கள் இருவரும் சிறந்தவர்கள் என்று நினைக்கிறேன். அஜித் உடன் 'வீரம்' படத்தில் நடித்தபோது அஜித் எனக்கு இட்லி சுட்டுக்கொடுத்தார். நல்ல மனம் கொண்டவர், எளிய மனிதர். குடும்பத்தை மதிக்கும் நல்ல குடும்பஸ்தர். இவ்வாறு தமன்னா பேசினார்.