'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

புச்சி பாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பெத்தி'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'சிக்கிரி சிக்கிரி' பாடல் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியானது.
யு டியூப் தளத்தில் 24 மணி நேரத்தில் 29.1 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்தது. தற்போது அந்த சாதனையை அதே படத்தின் இரண்டாவது சிங்கிளாக வெளியான 'ரை ரை ரா ரா' பாடல் முறியடித்துள்ளது. இப்பாடல் தெலுங்கில் மட்டும் 29.2 மில்லியன் பார்வைகளை 24 மணி நேரத்தில் பெற்றுள்ளது. அனைத்து மொழிகளையும் சேர்த்து 46 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
முதல் சிங்கிளான 'சிக்கிரி சிக்கிரி' பாடல் தற்போது யு டியுப் தளத்தில் மட்டும் 178 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அப்பாடலைப் போல 'ரை ரை ரா ரா' பாடலும் சீக்கிரத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'பெத்தி' படம் ஏப்ரல் 30ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.




