Advertisement

சிறப்புச்செய்திகள்

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

6 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் மம்முட்டி

05 பிப், 2026 - 10:41 IST
எழுத்தின் அளவு:
Mammootty-back-in-Tamil-after-6-years
Advertisement


மலையாளத் திரையுலகத்தின் சீனியர் கதாநாயகர்களில் ஒருவர் மம்முட்டி. மலையாளப் படங்களில் இப்போதும் கதாநாயகனாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து இளம் நடிகர்களை விடவும் வெற்றியையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். அவரது இயக்கத்தில் சமீபத்தில் வந்த 'களம்காவல்' படத்தில் கூட மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

தமிழில் நடிக்க வருவதற்கு முன்பே தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகராக இருந்தார். 1990ல் வெளிவந்த 'மௌனம் சம்மதம்' படம் மூலம் தமிழ்ப் படங்களில் நடிக்க வந்தார். கடந்த 35 வருடங்களில் 16 தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். அவற்றில் ''அழகன், தளபதி, மக்களாட்சி, அரசியல், மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், பேரன்பு” ஆகிய படங்கள் குறிப்பிட வேண்டிய படங்கள். அவர் கடைசியாக தமிழில் நடித்த 'பேரன்பு' படம் 2019ல் வெளிவந்தது.

கடந்த ஆறு வருடங்களாக தமிழில் நடிக்காமல் இருந்தார். இங்குள்ள இயக்குனர்கள் அவரை யாரும் அணுகவில்லையா, அல்லது அவர்கள் சொன்ன கதைகளும், கதாபாத்திரங்களும் மம்முட்டிக்குப் பிடிக்கவில்லையா என்பது தெரியவில்லை.

ஆனால், 'தனுஷ் 55' படத்தில் மம்முட்டி நடிக்க உள்ளார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பாகவே வெளிவந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் அவர் மட்டும்தான் நடிக்க வேண்டும் என இயக்குனர் ராஜ்குமாரி பெரியசாமி உறுதியாக உள்ளார் என்றும் சொன்னார்கள். கடைசியாக அப்படத்தில் அவர் நடிக்கிறார் என்பதை நேற்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் உறுதி செய்தார்கள்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து மம்முட்டி, “இந்தப் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறேன்,” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதை மறுபதிவிட்டு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, “சார், இதை நம்பவே முடியாது போல் இருக்கிறது. அன்புள்ள மம்முட்டி சாருக்கு மிக்க நன்றி, இது ஒரு பெருமை“, என்றும் படத்தின் நாயகன் தனுஷ், “இது மிகப் பெரும் பாக்கியம் சார்,” என்று தனுஷும் குறிப்பிட்டுள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிப்ரவரி கடைசியில் 'அஜித் 64' படப்பிடிப்புபிப்ரவரி கடைசியில் 'அஜித் 64' ... சிகரெட் பிடிக்கமாட்டேன், தண்ணி அடிக்கமாட்டேன் : லெஜண்ட் சரவணன் சிகரெட் பிடிக்கமாட்டேன், தண்ணி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap