'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

நடிகர் மம்முட்டி படங்களில் நடிப்பதை தாண்டி, தான் நடத்தி வரும் அறக்கட்டளை மூலமாக பல்வேறு உதவிகளை இயலாதவர்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் அறக்கட்டளை ஒன்றின் சார்பாக காது கேளாதவருக்கான கருவியை (ஹியரிங் எய்டு கருவி) அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார் மம்முட்டி. அப்போது சில வருடங்களுக்கு முன்பு தனது படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டார் மம்முட்டி.
கடந்த 2009ல் மலையாளத்தில் 'லவ்டு ஸ்பீக்கர்' என்கிற படத்தில் காது கேளாத மாற்றித்திறனாளியாக நடித்திருந்தார் மம்முட்டி. அந்த படத்தில் பெரும்பாலும் 'ஹியரிங் எய்டு' அணிந்து கொண்டுதான் மற்றவர்கள் பேசுவதை அவர் புரிந்து கொள்வார். அந்த சமயத்தில் படப்பிடிப்பில் நிஜமாகவே இதுபோன்று காது கேளாத மாற்றுத்திறனாளி தொழிலாளி ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருக்காக மம்முட்டி ஹியரிங் எய்டு ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
அதை காதில் பொருத்தியதும் முதன் முதலாக சப்தத்தை கேட்டு உணர்ந்த அந்த தொழிலாளி அதிர்ச்சி அடைந்து போய் அந்த ஹியரிங் எய்டை கழட்டி தூக்கி வீசி விட்டாராம். இந்த நிகழ்வை கூறிய மம்முட்டி, “அத்தனை நாட்களாக சப்தம் எதையுமே கேட்டிராத அந்த நபருக்கு முதன்முதலாக அதை கேட்டபோது அதன் தாக்கத்தை அவரால் உடனடியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவர் அதை கழட்டி வீசினார்” என்று கூறியுள்ளார்.




