அடுத்தடுத்து வசூல் சாதனை படைத்த ஹாலிவுட் படங்கள் | அப்ப, ஜனநாயகன் வரலையா... : ஜூன் 19ல் நுாறு சாமி ரிலீஸ் | இழந்த பெருமை, வசூலை மீண்டும் மீட்பாரா ராம் சரண்? | மும்பை அருகே நிலம் வாங்கிய யஷ் | கில்லர் படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடந்தது எப்படி | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படம் டிராப் ஆகிறதா? | 'பெத்தி' படத்திற்கு டிக்கெட் உயர்வு ஆணை அளித்தது தெலுங்கானா அரசு | கில்லர் படத்துக்கு தொடரும் தடங்கல்கள் : அப்செட்டில் எஸ்.ஜே.சூர்யா | தமிழகத்தில் ‛கருப்பு' படத்தை பார்த்த ஒரு கோடி பேர் | ஜூன் 15ல் ஓடிடியில் வெளியாகும் ‛கெணத்த காணோம்' |

கடந்த 2001ம் ஆண்டு ராஜமவுலி இயக்கிய முதல் படமாக ஸ்டூடண்ட் நம்பர் ஒன் தொடங்கி அவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் எம்.எம்.கீரவாணி. அந்த வகையில், மகதீரா, ஈகா, பாகுபலி, பாகுபலி2, ஆர்ஆர்ஆர் என பல பிரமாண்ட படங்களுக்கு இசையமைத்துள்ள கீரவாணி தற்போது ராஜமவுலி இயக்கி வரும் வாரணாசி படத்திற்கும் இசையமைக்கிறார்.
மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை 50 சதவிகிதம் நடந்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இசைப்பணிகள் குறித்து எம்.எம்.கீரவாணியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இப்படத்தின் பாடல் கம்போஸிங் ரெக்கார்டிங்கை ஏற்கனவே முடித்து விட்டோம். பின்னணி இசைப் பணிகளை வருகிற செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்போகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வாரணாசி படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதத்தோடு முடிந்துவிடும் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




