ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் 'துரந்தர்'. ஆதித்யா தார் இயக்கிய இந்த படம் 1300 கோடி வரை வசூலித்தது. அதோடு இப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி உள்ளது. வருகிற மார்ச் 19ம் தேதி இப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர் இந்த 'துரந்தர்' படம் குறித்து வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ''சமீப காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் துரந்தர் முக்கியமானது. இந்த படத்தை நான் இரண்டு முறை பார்த்து உள்ளேன். படத்தில் ஒவ்வொரு நடிகரும் தங்களது 100 சதவீத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். கதையை பெரிய அளவில் முன்னோக்கி எடுத்துச் சொல்லும் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கும் ஆவலுடன் நான் காத்திருக்கிறேன்'' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அனிமல் படத்தின் ஹிட்டுக்கு பிறகு தற்போது ஹிந்தியில் தயாராகி வரும் 'ராமாயணா' படத்தின் இரண்டு பாகங்களிலும் ராமன் வேடத்தில் நடித்து வருகிறார் ரன்பீர் கபூர்.