பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் |

நடிகர் பஹத் பாசில் எப்போது தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தாரோ அப்போதிருந்தே கதாநாயகனாக மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிக்க துவங்கினார். அதற்கு ஏற்ற வகையில் 'புஷ்பா' மற்றும் 'மாமன்னன்' படங்களில் அவரது வில்லத்தனமான நடிப்பு இன்னும் அதிக ரசிகர்களை அவருக்கு தேடித்தந்தது. அதே சமயம் மலையாளத்தில் அவர் கதாநாயகனாக மட்டுமே நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது மம்முட்டி மோகன்லால் குஞ்சாக்கோ போபன் ஆகியோருடன் இணைந்து 'பேட்ரியாட்' என்கிற படத்தில் நடித்துள்ளார் பஹத் பாசில்.
நான்கு முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் இதில் வில்லன் யார், அதற்காக தனியாக ஒரு பாலிவுட் நட்சத்திரம் ஏதும் நடித்திருக்கிறாரா என்கிற எதிர்பார்ப்பும் யூகங்களும் ரசிகர்களிடம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பஹத் பாசில், ''பேட்ரியாட் படத்தில் நான் வில்லனாகத்தான் நடிக்கிறேன்'' என உண்மையை போட்டு உடைத்துள்ளார். மீண்டும் ஒரு வில்லத்தனமான நடிப்பை அவரிடம் இருந்து பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்க துவங்கியுள்ளனர்.