Advertisement

சிறப்புச்செய்திகள்

'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிப்ரவரி 26ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம்?

10 பிப், 2026 - 11:02 IST
எழுத்தின் அளவு:
Vijay-Deverakonda-and-Rashmika-Mandanna-to-get-married-on-February-26
Advertisement

தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான நட்சத்திர காதல் ஜோடியான விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்கு பிப்ரவரி 26ம் திருமணம் நடைபெற உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் பிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் என்ற தகவல் வெளியானது. இருந்தாலும் இதுவரையில் இருவரும் அவர்களது திருமணத்தைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை.

சமீபத்தில் விமான நிலையத்தில் ராஷ்மிகாவிற்கு ஒரு புகைப்படக் கலைஞர் வாழ்த்துகள் என்று சொன்ன போது கூட சிரித்துக் கொண்டே போய்விட்டார். ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூரில் அரண்மனை ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற உள்ளதாம். அதற்கு இருவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு செய்கிறார்களாம். அதற்குப்பின் ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நடத்த உள்ளதாகவும், அதற்கு திரையுலகில் உள்ள அனைவரையும் அழைத்து நடத்தப் போவதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடைபெற்றதென செய்திகள் வந்தன. அடுத்த சில நாட்களில் இவர்களது திருமணம் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜனநாயகன் பட வழக்கை வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம்ஜனநாயகன் பட வழக்கை வாபஸ் பெற்றது ... மோகன்லால் மம்முட்டிக்கு நான் வில்லன் தான் ; உறுதி செய்த பஹத் பாசில் மோகன்லால் மம்முட்டிக்கு நான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap