திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

தெலுங்கில் 2025ல் வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' படத்திற்குப் பிறகு ஷங்கர் அடுத்து இயக்கப் போகும் படம் எது என்பது குறித்து சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால், அவர் 'வேள்பாரி' படத்தைத்தான் எடுக்க உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதற்கான திரைக்கதை உள்ளிட்ட வேலைகளை அவர் எப்போதோ முடித்துவிட்டார்.
படத்தில் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்பது குறித்த தீவிர வேலைகளில் அவரும் அவரது குழுவினரும் இறங்கியுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பெரும் பட்ஜெட்டில் தயாராக உள்ள இந்தப் படத்தில் மற்ற மொழிகளிலிருந்தும் முக்கிய நடிகர்களை நடிக்க வைக்கும் முடிவில் இருக்கிறார்களாம்.
தனது முந்தைய படங்களான 'இந்தியன் 2, கேம் சேஞ்ஜர்' ஆகிய படங்களின் தோல்விகளிலிருந்து மீண்டும் 'வேள்பாரி' படத்தை அனைவரும் பேசும் விதத்தில் எடுத்தாக வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருக்கிறாராம் ஷங்கர்.




