'கைதி 2' படத்திற்குப் பிறகு 'ஹிட் 4'ல் நடிக்க உள்ள கார்த்தி | 'ஆபரேஷன் சிந்தூர்' : டிரேட் மார்க் பதிவுக்கான விண்ணப்ப சர்ச்சை | 'ரெட்ரோ' ருக்கு - வாழ்த்தியவர்களுக்கு பூஜா ஹெக்டே நன்றி | லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி |
கமல் நடித்து வரும் இந்தியன்-2 மற்றும் ராம்சரண் நடிக்கும் ஆர்சி -15 ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த படங்களை தொடர்ந்து பார்லிமென்ட் எம்பி சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற சரித்திர நாவலை தழுவி தனது புதிய படத்தை எடுக்க உள்ளார். சுமார் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக ஷங்கர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த படம் குறித்து விருமன் படத்தின் ஆடியோ விழாவில் பேசிய சூர்யா, எழுத்தாளர் சு. வெங்கடேசனுடன் தான் ஒரு பெரிய வேலையில் இருப்பதாக தெரிவித்திருந்தார். இது ஷங்கரும் அவரும் இணையப் போவதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அளித்த ஒரு பேட்டியில், 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் வேள்பாரி படத்தின் பிரீ புரொடக்சன் பணிகளை இயக்குனர் ஷங்கர் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு வேள்பாரி படம் மூன்று பாகங்களாக 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்து இருக்கிறார்.
அதனால் இந்தியன்- 2 மற்றும் ராம்சரண் நடிக்கும் படங்களின் மொத்த படப்பிடிப்பையும் இந்த ஆண்டுக்குள் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு சூர்யா நடிக்கும் வேள்பாரி படவேலைகளை ஷங்கர் தொடங்குவார் என்பது உறுதியாகி இருக்கிறது. அதோடு இப்படத்தில் கன்னட நடிகரான கேஜிஎப் யஷ் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதாகவும் கூறப்படுகிறது.