'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கவின். தற்போது இவர் ஹாய் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தண்டட்டி படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை பெற்ற இயக்குனர் ராம் சங்கயா இயக்கத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். லப்பர் பந்து, சர்தார் போன்ற படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றும் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. காரணம் நாயகி தேர்வில் இழுபறி நீடித்தது. தற்போது இதில் கதாநாயகியாக லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்திற்காக கவினுக்கு சில கோடிகள் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.




