இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? | சூரியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் கொட்டாச்சி |

தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகும் தெலுங்குப் படம் 'சரஸ்வதி'. இப்படத்தை அவரது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார்.
தமன் இசையமைக்கும், இப்படத்தில் வரலட்சுமி, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ், கிஷோர், ராவ் ரமேஷ், முரளி சர்மா, ராதிகா சரத்குமார், நாசர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டிரைலரை தெலுங்கு நடிகர் நானி வெளியிட்டார்.
“சில பயணங்கள் அவற்றுக்குப் பின்னால் இருக்கும் மக்களால் சிறப்பு வாய்ந்தவை. 'சரஸ்வதி' டிரைலரை வெளியிடுவதில் சூப்பர் பெருமை, அன்பான தோழி வரலட்சுமி இயக்கியது. அவர் இதில் ஆற்றிய கடின உழைப்பை நான் பார்த்திருக்கிறேன், அது உண்மையிலேயே உங்கள் அனைவரின் அன்பையும் தகுதியானது. முழு குழுவுக்கும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று நானி படக்குழுவை வாழ்த்தியுள்ளார். அவருக்கு வரலட்சுமி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ஒரு பரபரப்பான த்ரில்லர் படமாக இப்படம் இருக்கும் என்பது டிரைலரைப் பார்க்கும் போது தெரிகிறது.