ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி தனது திருமணத்திற்கு பின்பு படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டாலும் திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப் சீரிஸ்களிலும் நல்ல நல்ல வாய்ப்புகள் அவரை தேடி வரத்தான் செய்கின்றன. அப்படி செலெக்ட்டிவாக நடித்து வரும் பிரியாமணி தற்போது ஹிந்தியில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் இந்திய அமெரிக்க கூட்டு தயாரிப்பாக உருவாகிறது.
கதாநாயகனாக மோகித் ரெய்னா நடிக்கும் இந்த படத்தை இயக்குனர் ஹர்ஸ் மகாதேஸ்வர் இயக்குகிறார். புலம் பெயர்ந்த இந்தியர்கள் அந்த நாடுகளில் தங்கள் வாழ்க்கையை நடத்த எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகளை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. கடந்த வருடம் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் கூட இதே கதையம்சத்தை கொண்டு வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.




