'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

பெண்கள் அதிலும் நடிகைகள் இயக்குனர்களாக மாறுவது ரொம்பவும் அரிதாக நடக்கும் நிலையில் 'சரஸ்வதி' என்கிற படத்தின் மூலமாக நடிகை வரலட்சுமி சரத்குமார் முதன்முறையாக இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். அவரே கதாநாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தை அவர் தெலுங்கிலேயே இயக்கியிருக்கிறார். இந்த படம் வரும் மார்ச் 6ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு படத்திற்கு 'யு/ஏ 16 பிளஸ்' சான்றிதழ் அளித்துள்ளனர். 121 நிமிடம் ஓடும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது.
அதே சமயம் இந்த படத்தின் டைட்டில் 'சரஸ்வதி' என பெண் கடவுளின் பெயரை குறிப்பதாக இருப்பதால் டைட்டிலில் ஒரு சிறிய மாற்றமாக 'எஸ்' என்கிற எழுத்தை சேர்த்து 'எஸ்.சரஸ்வதி' என மாற்றச்சொல்லி சென்சார் போர்டு வலியுறுத்தியதை படக்குழுவினர் ஏற்றுக்கொண்ட பிறகு தான் சென்சார் போர்டு, சான்றிதழே வழங்கி இருக்கிறது. கடந்த வருடம் கேரளாவில் அனுபமா பரமேஸ்வரன், சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான 'ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா' என்கிற படம் இதேபோல சென்சாரில் சிக்கி பின்னர் 'ஜானகி வி' என்று ஒரு இன்சியல் சேர்த்து அதன்பிறகே வெளியானது குறிப்பிடத்தக்கது.




