மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

கடந்த சில நாட்களாகவே ஈரான், இஸ்ரேல் போர் கடுமையாக நடைபெற்று வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் உள்ள வான்வெளி எல்லைகள் மூடப்பட்டு விமான பயணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்தியாவைச் சேர்ந்த பல பிரபலங்கள் குறிப்பாக திரையுலகை சேர்ந்த பலரும் வெவ்வேறு வளைகுடா நாடுகளுக்கு சென்றவர்கள் இதனால் போர் பதற்றத்திற்கு இடையே அங்கேயே தங்க வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டது. அப்படி சிக்கிக் கொண்டவர்களில் 'லப்பர் பந்து' பட புகழ் நாயகி சுவாசிகாகவும் ஒருவர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டு அங்கே தங்கி இருந்த சுவாசிகா பிப்ரவரி 28ம் தேதி திரும்புவதாக திட்டமிட்டு இருந்தார். ஆனால் திடீர் என போர் மூண்டதன் காரணமாக அவரால் ஊர் திரும்ப முடியவில்லை. நான் தனி ஒருத்தியாக மட்டும் இங்கே வந்திருந்ததால் கொஞ்சம் அதிகமாக கவலைப்பட்டேன். அதேசமயம் என்னை சுற்றி இருந்தவர்கள் ரொம்பவே ஆதரவாக இருந்தார்கள். ஒரு வழியாக தற்போது சில விமான போக்குவரத்துகள் துவங்கியிருப்பதால் ஊர் திரும்ப முடிந்தது” என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் சுவாசிகா.