Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹைதராபாத் 'ஷிப்ட்' ஆன லோகேஷ் கனகராஜ் 'டீம்'

05 மார், 2026 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Lokesh-Kanagaraj-team-shifted-to-Hyderabad
Advertisement


ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படத்தை இயக்கியதற்குப் பிறகு கமல், ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், தான் சொன்ன ஆக்ஷன் கதையை அவர்கள் வேண்டாமென்று சொன்னதாகவும், ஒரு 'லைட்டான' கதையை அவர்கள் விரும்பியதாகவும் தெரிவித்திருந்தார்.

அதையடுத்து அவரது அடுத்த படத்திற்கு வேறு ஹீரோக்களுடன் பேச ஆரம்பித்தார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு லோகேஷ் சொன்ன கதை பிடித்துப் போக உடனடியாக படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள். தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படம் லோகேஷ் இயக்கத்தில் சூர்யா நடிக்க, உருவாவதாக இருந்த 'இரும்புக் கை மாயாவி' படம்தான் என்றும் ஒரு பேச்சு எழுந்தது.

இந்நிலையில் அந்தப் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் மற்றும் குழுவினர் சமீபத்தில் ஹைதராபாத்திற்கு மொத்தமாக 'ஷிப்ட்' ஆகியுள்ளனர். இந்த வருடக் கடைசியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. முன் தயாரிப்புப் பணிகளுக்காக இப்போதே அங்கு போய்விட்டார்கள். அடுத்த ஆண்டு படம் வெளியாகும் வரை அனைவரும் அங்குதான் இருப்பார்களாம். 2028ம் வருடம்தான் மீண்டும் சென்னை பக்கம் வருவார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்?தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ ... வரலட்சுமியின் 'சரஸ்வதி' படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் வரலட்சுமியின் 'சரஸ்வதி' படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap