சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் |

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா 1, 2 படங்களுக்கு பிறகு பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தனது 22வது படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு சூப்பர் ஹீரோ கதையில் தயாராகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் அவரது 23வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிரூத் இசையமைத்திருக்கிறார். தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறார்கள். ஒருவேளை இவர் நடிப்பது உறுதியானால் லோகேஷ் கனகராஜ் படத்தில் பாலிவுட் நடிகைகள் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.