நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் -2 படத்தின் முக்கிய அறிவிப்பு! | சினிமாவை விட வெளியில் தான் பாதுகாப்பின்மையை உணர்கிறேன்: ஷ்ரத்தா ஸ்ரீநாத் | 18 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் பொம்மரிலு | பிளாஷ்பேக் ; போலீஸ் பெல்டால் தந்தையிடம் அடி வாங்கிய ராம்சரண் | நடிகையின் குற்றச்சாட்டுக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த நடிகர் ஆசிப் அலி | மெய்யழகன் சண்டைக்காட்சி பற்றி கார்த்தி உடைத்த சஸ்பென்ஸ் | நல்ல படத்தை மிஸ் செய்ததற்கு வருத்தப்படுகிறேன் - ரகுல் ப்ரீத் சிங் | ஓணம் வாழ்த்து எதிரொலி - கடும் விமர்சனத்தில் சிக்கிய விஜய்! | ராகவா லாரன்ஸின் 25வது படத்தை இயக்கும் தெலுங்கு பட இயக்குனர்! | அமரன் படத்தின் டப்பிங் பணிகளைத் முடித்த சிவகார்த்திகேயன்! |
புராணங்களை படமாக்குவதில் தெலுங்கு சினிமா எப்போதும் அதிக ஆர்வம் கொண்டுள்ளது. பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராமவுலி மகாபாரதத்தை தனது கனவு படமாக அறிவித்துள்ளார். அதேபோன்று அல்லு அர்ஜூன் தனது கனவு படமாக ராமாயணத்தை அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் என்ற படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்படுவதால் அல்லு அர்ஜூன் தனது திட்டத்தை கைவிட்டுவிட்டதாக கூறப்பட்டது.
இதுகுறித்த கேள்விக்கு அல்லு அர்ஜூன் அளித்த பதில் வருமாறு: நான் அறிவித்த ராமாயணம் படம் நின்றுவிடவில்லை, கைவிடப்படவும் இல்லை. ஒன்றரை வருடமாக தயாரிப்புக்கு முந்தைய பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் ஆறு மாதத்துக்குள் இந்த பணி முடிவடைந்துவிடும். அடுத்த ஆண்டு ராமாயணம் படப்பிடிப்பு தொடங்கிவிடும்.
இந்த படம் இந்தியாவிலேயே பெரிய படமாகவும், பெரிய பட்ஜெட்டில் எடுத்த படமாகவும் இருக்கும். ராமாயணம் படத்தை நாங்கள் எடுக்க போவதாக அறிவித்த நேரத்தில் பட்ஜெட் ரூ.500 கோடி. இப்போது இந்த மதிப்பீடு இன்னும் அதிகமாகும். இரட்டிப்பு ஆனாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. ஆனால் படம் எடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பணிகள் நடைபெறுகின்றன என்கிறார் அல்லு அர்ஜூன்.