ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் |

2025ம் ஆண்டை பொறுத்தவரையில் பெரிய நடிகர்கள் நடித்த பல படங்கள் ஓடவில்லை. சின்ன பட்ஜெட் படங்கள், மீடியம் பட்ஜெட் படங்கள், கதைக்கு முக்கியத்துவமுள்ள சில படங்களே ஓடின. குறிப்பாக, இந்த ஆண்டு காமெடிக்கு முக்கியத்துவமுள்ள படங்கள் அதிகம் வரவில்லை. ரசிகர்கள் தியேட்டரில் அதிகமாக சிரிக்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, காமெடி நடிகர்களின் பங்களிப்பு இந்த ஆண்டு பெரிய ஏமாற்றம் என்கிறார்கள்.
காமெடியனாக அதிக படங்களில், கோடிகளை சம்பாதித்த யோகிபாபுவுக்கு 2025ம்ஆண்டு சரியில்லை. அவர் நல்ல சிரிப்பை தரும் படங்களில் நடிக்கவில்லை. மாறாக, அவர் நடித்த சின்ன படங்கள், புதுமுகங்கள் நடித்த படங்கள் கடுப்பைதான் தந்தன. அவரும் பல சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்களின் வெறுப்பைதான் சம்பாதித்தார் என்கிறார்கள்.
2025ம் ஆண்டு வந்த படங்களில் 'டூரிஸ்ட் பேமிலி'யில் சிம்ரன் மகனாக நடித்த கமலேஷ் கொஞ்சம் சிரிக்க வைத்தார், 'ஆண்பாவம் பொல்லாதது' படத்தில் வக்கீலாக வந்த ஜென்சன் திவாகர் சிரிக்க வைத்தார். 12 ஆண்டுகளுக்குபின் வந்த 'மதகஜராஜா'வில் சந்தானம் நல்ல சிரிப்பை தந்தார்.
'பறந்து போ'வில் ஹீரோ, ஹீரோயின் காமெடி பண்ணினார்கள். 'கேங்கர்ஸ், மாரீசன்' என 2 படங்களில் நடித்தார் வடிவேலு, இரண்டுமே வேறு ரகம். 'தேசிங்குராஜா 2'வில் சிரிப்பே இல்லை. 'குடும்பஸ்தன்' படத்தில் கதையுடன் காமெடி இருந்தது. 'பெருசு' அடல்ட் காமெடி. விக்ரம் பிரபுவின் 'லவ் மேரேஜ்' கதையிலும் கொஞ்சம் சிரிப்பு இருந்தது. இந்த ஆண்டு வெற்றி பெற்ற 'டிராகன், டியூட்' படத்தில் ஹீரோவே, நண்பர்களுடன் காமெடி செய்தார். சந்தானம் நடித்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்'ம் தமாசு இல்லை. ஏதோ ஊறுகாய் மாதிரி இந்த ஆண்டு படங்களில் காமெடி இருந்தது என்கிறார்கள் விமர்சகர்கள்.