தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து பிஸியான நடிகராக வலம் வருகிறார். நடிப்பு தாண்டி இயக்கம், தயாரிப்பு, பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவராக உள்ளார். இவருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். தனுஷ் தனது மகன்களுடன் திருப்பதியில் பெருமாளை வழிபாடு செய்தார். உடன் அவரது குடும்பத்தினரான அப்பா, அம்மா, சகோதரிகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் சாமி தரிசனம் செய்தனர். தனுஷின் 55வது பட அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. இதை தனுஷும் இணைந்து தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவை கதாநாயகனாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளாராம். இதை தனுஷ் இயக்கி, தயாரிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. இதுபற்றி விசாரித்தபோது, இப்போதைக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. தனுஷ் தொடர்ச்சியாக இரண்டு, மூன்று படங்கள் கைவசம் வைத்துள்ளார் என்றனர். அதேசமயம் யாத்ரா நடிப்பு, நடனம் போன்ற சினிமா சார்ந்த விஷயங்களை கற்று வருகிறாராம். இன்னும் ஓரிரு ஆண்டுகள் கழித்து மகனை களமிறக்கலாம் என்கின்றனர்.