மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

நடிகர் தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவரது 55வது படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனுஷின் 56வது படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் என அறிவித்தனர்.
இந்த படம் அல்லாமல் ஏற்கனவே தனுஷின் அடுத்த படங்கள் இயக்கும் பட்டியலில் தமிழரசன் பச்சமுத்து காத்திருந்தார். இந்நிலையில் இன்று தமிழரசன் பச்சமுத்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஒரு கோவிலில் உட்கார்ந்துள்ள போட்டோவை பகிர்ந்து 'கெளம்பியாச்சு' #D56 என்கிற ஹேஸ்டேக் உடன் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தனுஷின் 56வது படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்க, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.
சரி, மாரி செல்வராஜ் படம் என்ன ஆனது என்பது குறித்து விசாரித்தபோது, மாரி செல்வராஜ் படம் மிகப்பெரிய படம் என்பதால் முன் தயாரிப்பு பணிகளுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறதாம். அதனால் இந்தபடம் தள்ளிப்போகும் என்கிறார்கள்.