Advertisement

சிறப்புச்செய்திகள்

இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? | சூரியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் கொட்டாச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு

21 பிப், 2026 - 02:49 IST
எழுத்தின் அளவு:
Mahesh-Babu-at-AMB-Cinemas-Theater,-Bengaluru
Advertisement

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு, சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களையும் ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

இதற்கு முன்பு ஐதராபாத்தில், கச்சிபவுலி என்ற இடத்தில் எசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஎம்பி சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரைத் திறந்து நடத்தி வருகிறார். அடுத்து பெங்களூருவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்டும் பணியில் இறங்கினார்.

பெங்களூரு, காந்தி நகர் பகுதியில் 1968 முதல் செயல்பட்டு வந்த கபாலி தியேட்டரை வாங்கி 2020ல் அந்தத் தியேட்டரை இடித்து, அங்கு ஏஎம்பி சினிமாஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டரைக் கட்ட ஆரம்பித்தனர். கடந்த ஜனவரி மாதம் அந்தத் தியேட்டர் திறக்கப்பட்டது. அதன்பிறகு நேற்று தான் அந்தத் தியேட்டருக்கு மகேஷ்பாபு முதல் முறையாகச் சென்றார்.

தியேட்டர் செயல்பாடு குறித்து ஊழியர்களுடன் விவாதித்து ஆலோசனை சொன்னார். 9 திரைகள் கொண்ட அந்த மல்டிபிளக்ஸில் 'டால்பி சினிமா' என்ற அகன்ற திரை ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் முதல் டால்பி சினிமா திரை இது. 588 இருக்கைகள் கொண்ட அந்தத் தியேட்டரின் திரை 65 அடி அகலமும், 27 அடி உயரமும் கொண்டது. 2.39 : 1 என்ற விகிதத்தில், இரட்டை 4கே ஆர்ஜிபி பியுர் லேசர் டால்பி விஷனில் அதன் திரையீடு இருக்கும். 64 ஆடியோ சானல்களுடன் டால்பி அட்மாஸ் ஒலி அமைப்பில், அல்ட்ரா எச்டிஆர் வெளிச்சத்தில், 1,000,000 : 1, என்ற கருப்பு மாறுபாடு விகிதத்தில் ஒளி அமைப்புடன் படங்கள் திரையிடப்படும்.

ஐமேக்ஸ், எபிக் போன்ற பெரிய திரை தொழில்நுட்பத்தில் மற்றுமொரு வடிவம் இந்த டால்பி சினிமாஸ். சினிமா ரசிகர்களுக்கான தரமான அனுபவத்தைத் தரும் மற்றுமொரு சிறந்த தொழில்நுட்ப திரையீடு இது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி…சென்னையும், தமிழும்…. பிரபாஸ் ... வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap