'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

மலையாள திரையுலகில் மூத்த எழுத்தாளரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் தற்போது தனது 86வது வயதில் மம்முட்டி நடிக்கும் 'படயாத்ரா' என்கிற படத்தை இயக்கி வருகிறார். கேரளாவில் பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மம்முட்டி டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதாவது நகரங்களில் தனியார் மருத்துவமனைகளில் அவருக்கான டிமாண்ட் அதிகம் இருந்தும் கூட அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்குச் சென்று ஒரு வீடு, அதனுடனே இணைந்த கிளினிக் என ஒரு எளிமையான மருத்துவராக இதில் நடித்திருக்கிறார்.
பல நோயாளிகளிடம் பணம் எதுவும் வாங்காமல் அருகில் ஒரு உண்டியல் வைத்து அவர்களால் முடிந்ததை அதில் போடச் சொல்கிற கதாபாத்திரம் அது. சொல்லப்போனால் தமிழ்நாட்டில் ஐந்து ரூபாய் டாக்டர் என்று பெயர் பெற்று வாழ்ந்து மறைந்த சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த டாக்டர் ஜெயச்சந்திரன் போல மம்முட்டியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.




